Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாரத்தை தாங்குறவங்களே உயர்ந்த இடத்துக்கு வரமுடியும்- விஜய் சேதுபதி

Advertiesment
பாரத்தை தாங்குறவங்களே உயர்ந்த இடத்துக்கு வரமுடியும்- விஜய் சேதுபதி
, ஞாயிறு, 7 அக்டோபர் 2018 (09:03 IST)

எஸ் நந்தகோபால் தயாரிப்பில், பிரேம்குமார் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் 96. இப்படத்தில் விஜய் சேதுபதி, திரிஷா, பக்ஸ்,ஆடுகளம் முருகதாஸ், தேவதர்ஷினி, ஆதித்யா பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படம் ரசிகர்கள் இடையே பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
 

இந்நிலையில் இப்படத்தின் வெற்றிக்கு காரணமானவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது.

இவ்விழாவில் விஜய் சேதுபதி, தயாரிப்பாளர் நந்தகோபால், இயக்குநர் பிரேம்குமார், இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா, பாடலாசிரியர் கவிஞர் உமாதேவி,பாடகி சின்மயி, நடிகர் சூர்யா, கௌதம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் நடிகர் விஜய் சேதுபதி பேசுகையில்,‘தமிழ் சினிமா மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறது. பரியேறும் பெருமாளின் வெற்றி கொண்டாடப்படுகிறது. சாதியின் தீவிரத்தையும், அதன் தீவிரவாதத்தையும் அழகியலுடன் சொல்லப்பட்ட படம் அது. பிரேம்குமார் என்ற ஒரு படைப்பாளிக்கு சொந்தமான படைப்பு தான் 96. ஆனால் அதனை பார்க்கும் அனைவரும் தங்களுக்கு சொந்தமான படமாக நினைக்க வைத்திருக்கிறது.

இங்கு திரையுலகில் ஏராளமான பிரச்சனைகள் இருக்கிறது. அதற்காக யாரும் யார்மீது குறைச் சொல்வதற்கு ஒன்றுமேயில்லை. 

தயாரிப்பாளர் நந்தகோபால் பட்ட கஷ்டத்தை நான் நேரில் பார்த்தேன். வலித்தது. ஆனால் சில சமயத்தில் வேறு வழியில்லை. ஏனெனில் இதெல்லாம் ஒரு குடும்பம். வாழ்க்கையில் இது போன்ற பிரச்சினைகள் வரும் போது நான் அடுத்தக்கட்டத்திற்கு போகப்போகிறேன். யார் மீது யார் எவ்வளவு பாரம் வைக்கப்போகிறார்களோ, யார் எவ்வளவு பாரம் தாங்குகிறார்களோ அவர்கள் தான் இன்னும் மேலே உயரமுடியும். என்னுடைய வாழ்க்கையில் பலமுறை இப்படி பல சம்பவங்களை கடந்து வந்திருக்கிறேன்' என்றார்


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இளையதளபதி, புரட்சி தளபதியுடன் கீர்த்திசுரேஷ்-வரலட்சுமி