Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குணமா சொல்ற தல....உம்... கம்.. ஜம்... ஆர்த்தியின் டுவிட்டால் கடுப்பான விஜய் ரசிகர்கள்

Advertiesment
குணமா சொல்ற தல....உம்... கம்.. ஜம்... ஆர்த்தியின் டுவிட்டால் கடுப்பான விஜய் ரசிகர்கள்
, ஞாயிறு, 7 அக்டோபர் 2018 (11:16 IST)
அஜித், அவரது மகள் படிக்கும் பள்ளிக்குச் சென்றபோது எடுக்கப்பட்ட வீடியோவை அவரது ரசிகர்கள் இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

 
சில விநாடிகள் மட்டுமே ஓடக்கூடிய வீடியோவில் பள்ளி வளாகத்தில் அஜித் நடந்து வருகிறார். அவரைக் கண்ட ஊழியர்கள் அவருடன் செல்ஃபி எடுக்க முயல்கின்றனர். அப்போது அவர்களிடம் பேசும் அஜித், “ஸ்கூலில் ஃபோட்டோ எடுக்கக் கூடாது. தப்பா நினைச்சுக்காதீங்க. நம்ம இன்னொரு நாள் எடுப்போம். நானே சொல்லி அனுப்புறேன். தம்பி அந்த கேமிரா மட்டும் ஆஃப் பண்ணிடுங்க. வள்ளி மேடம் ரெக்வெஸ்ட் பண்ணிருக்காங்க. நன்றி” என்று கூறியபடி விடைபெறுகிறார்.
 
இந்நிலையில் இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கும்  நடிகை ஆர்த்தி, “இந்த குணமா சொல்ற குணத்துக்கு தான் தல நீங்கள் எங்க "தல" உங்கள கடுப்பேத்தரவங்கள காயப்படுத்தாத. உசுப்பேத்தரவங்கள உதாசீணப்படுத்தாத குணத்ததாலதான் நீங்க ஜாம் ஜாம்னு இருக்கீங்க. எங்கள் தல ரசிகர்களின் அன்பும் இறைவன் ஆசீர்வாதங்களும் பல கோடி பெருகட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.
 
ஆர்த்தியின் இந்த ட்வீட்டை விமர்சித்த விஜய் ரசிகர்களுக்கு விஜய் பாணியில் பதிலளித்துள்ளார். அதில், “இந்த ட்வீட் புடிக்கலனா கம்முன்னு உம்முனு இருங்க ப்ரோ ப்ளீஸ் ” என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாரத்தை தாங்குறவங்களே உயர்ந்த இடத்துக்கு வரமுடியும்- விஜய் சேதுபதி