புஷ்பா -1 படம் ரஷியாவில் ரிலீஸாகும் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சுகுமார் இயக்கத்தில், நடிகர் அல்லு அர்ஜூன் – ரக்ஷனா மந்தனா நடிப்பில் உருவான படம் புஷ்பா. இப்படம் கடந்தாண்டு தமிழ், தெலுங்கு, இந்தி , கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும், உலகம் முழுவதும் ரிலீஸாகி ரூ.360 கோடிக்கு மேல் வசூலீட்டியுள்ளது.
இந்நிலையில், புஷ்பா திரைப்படத்திற்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது. இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்திருந்தார். ஓ சொல்ரியா மாமா, ஸ்ரீவள்ளி உள்ளிட்ட பாடகள் சூப்பர் ஹிட் ஆனது.
சமீபத்தில் மத்திய அரசின் தாதா சாஹிப் பால்கே விருது இப்படத்திற்கு அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இப்படத்தை ரஷிய மொழியில் டப் செய்யப்பட்டு வந்த நிலையில், புஷ்பா -1- தி ரைஸ் படம் வரும் டிசம்பர் 8 ஆம் தேதி ரஷியாவில் ரிலீஸ் செய்யப்படுகிறது.
இதைப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்படம் ரஷியாவில் வசூல் சாதனை படைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.