Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அஜித்தின் ''துணிவு'' படம் எப்போது ரிலீஸ் - ஹெச் வினோத் டுவீட்

thunivu second
, புதன், 26 அக்டோபர் 2022 (17:14 IST)
துணிவு படத்தின்  ரிலீஸ் குறித்து பல்வேறு தகவல் வெளியாகும் வரும் நிலையில், இயக்குனர் வினோத் ஒரு டிவீட் பதிவிட்டுள்ளார்.

தமிழ்  சினிமாவின் முன்னணி நடிகர் அஜித். இவர், நடித்துவரும் துணிவு படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட பணியான டப்பிங் தொடங்கி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளன. சென்னையில் உள்ள முக்கிய டப்பிங் தியேட்டரில் சமீபத்தில் துணிவு படத்தின் டப்பிங் பணிகள் தொடக்கத்திற்கான பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

இந்தப்படத்தின் அடுத்த அப்டேட் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கும் நிலையில் தயாரிப்பாளர் போனிகபூரின் மகளும் நடிகையுமான ஜான்விகபூர் தன் டுவிட்டர் பக்கத்தில் ‘’துணிவு படத்தின் அடுத்த அப்டேட் அடுத்த வாரம் நிச்சயமாக வெளியாகும்’’ என உறுதியளித்துள்ளார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில், துணிவு படத்தின் முதல் சிங்கில்தான் அடுத்த வாரம் வெளியாகும் என்று சினிமா வட்டாரத்தில் இருந்து ஒரு தகவல் வெளியாகிறது.

வாரிசு பட முதல் சிங்கிலும் அடுத்த வாரம் தான் வெளியாகும் என்ற நிலையில் இரு படங்களின் மீது எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த  நிலையில், வாரிசு படத்தின் விஎஃஎக்ஸ் பணிகள் இருப்பதால் பொங்கலுக்கு வெளியாகாது என்று ஒரு தகவல் வெளியான  நிலையில், இயக்குனர் வினோத் தன் டுவிட்டர் பகக்த்தில் துணிவு படத்தை பொங்கலுக்கு வெளியாகும் என்று உறுதிபடுத்தியுள்ளார்.

Edited by Sinoj


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

''வாரிசு ''படத்தில் என் டப்பிங் பணிகள் முடிந்தது- பிரபல நடிகர் டூவிட்