விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆவதை படக்குழு உறுதி செய்துள்ளது.
விஜய் நடித்து வரும் வாரிசு படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, பிரபு, பிரகாஷ் ராஜ் மற்றும் ஜெயசுதா ஆகியோர் நடிப்பதை படக்குழு உறுதி செய்துள்ளது. இந்த படம் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று தீபாவளியை முன்னிட்டு வெளியான போஸ்டரில் பொங்கல் ரிலீஸை படக்குழு உறுதி செய்துள்ளது. இந்நிலையில் வாரிசு படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையை மாஸ்டர் தயாரிப்பாளர் லலித்குமார் கைப்பற்றியுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் இப்போது படத்தின் ஜெர்மன் மற்றும் ஆஸ்திரியா நாட்டு உரிமையை Tamil de Flimverleih என்ற நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.