Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜிம் பாய்ஸ்களை வெளுத்து வாங்கிய விஜய்… வாரிசு படத்தில் நடந்த மாற்றம்!

ஜிம் பாய்ஸ்களை வெளுத்து வாங்கிய விஜய்… வாரிசு படத்தில் நடந்த மாற்றம்!
, செவ்வாய், 25 அக்டோபர் 2022 (10:14 IST)
விஜய் வாரிசு படத்தின் காட்சிகள் தொடர்ந்து லீக் ஆவது குறித்து அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய் நடித்து வரும் வாரிசு படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, பிரபு, பிரகாஷ் ராஜ் மற்றும் ஜெயசுதா ஆகியோர் நடிப்பதை படக்குழு உறுதி செய்துள்ளது. இந்த படம் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
இந்த படம் ஆரம்பித்ததில் இருந்து ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்படும் காட்சிகள் இணையத்தில் லீக் ஆகி அதிர்ச்சி அளித்து வருகின்றன. அந்த வகையில் இப்போது இந்த படத்தின் பாடல் ஒன்றை படமாக்கும் காட்சி இணையத்தில் லீக் ஆகி மேலும் பீதியைக் கிளப்பியுள்ளது.

இதனால் இந்த படத்தில் பணியாற்றிய ஜிம் பாய்ஸ் அனைவரும் தங்கள் வேலையை ஒழுங்காக செய்யவில்லை என்று அவர்களை கோபப்பட்டு திட்டிய விஜய், மேலும் சம்மந்தப்பட்ட நிறுவனத்தின் ஜிம் பாய்ஸ்களை நிறுத்திவிட்டு, வேறு ஒரு நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்ய சொல்லி கூறிவிட்டதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அல்லு அர்ஜுன் தம்பியை காதலிக்கிறாரா அனு இம்மானுவேல்… அவரே அளித்த விளக்கம்!