Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரபல மாடல் அழகி தற்கொலை....ரசிகர்கள் அதிர்ச்சி

Advertiesment
manjusha niyogi
, சனி, 28 மே 2022 (15:23 IST)
கொல்கத்தாவில் வங்க மொழி நடிகையான பிதிஷாவை தொடர்ந்து அவரது தோழியும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வங்காளத்தில் பிரபல மாடலாகவும், பட நடிகையாகவும் இருந்து வந்தவர் பிதிஷா. கொல்கத்தா நகரில் டம்டம் என்ற இடத்தில் நாகர்பஜார் பகுதியில் வாடகை குடியிருப்பில் வசித்து வந்த பிதிஷா கடந்த 25ம் தேதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பிதிஷாவின் தோழியான மற்றொரு வங்காள மாடல் மஞ்சுஷா நியோகி என்பவரும் தற்போது தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

பிதிஷா தற்கொலை செய்து கொண்ட பின்னர் மிகவும் மன வருத்தத்தில் இருந்த மஞ்சுஷா தொடர்ந்து பிதிஷா பற்றியே பேசி வந்த நிலையில்     தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீஸார், நடிகையின் சடலத்தைக் கைப்பற்றி, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அருவருக்கத் தக்க விதத்தில் கமெண்ட் செய்த நபர்… சமந்தாவின் ‘நச்’ பதில்!