Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அருவருக்கத் தக்க விதத்தில் கமெண்ட் செய்த நபர்… சமந்தாவின் ‘நச்’ பதில்!

அருவருக்கத் தக்க விதத்தில் கமெண்ட் செய்த நபர்… சமந்தாவின் ‘நச்’ பதில்!
, சனி, 28 மே 2022 (10:14 IST)
நடிகை சமந்தாவின் டிவிட்டர் பக்கத்தில் பாலோயர் ஒருவர் கமெண்ட் செய்ததும் அதற்கு சமந்தா பதில் அளித்ததும் கவனத்தை ஈர்த்துள்ளது.

நடிகை சமந்தா சமீபத்தில் நாக சைதன்யாவை விவாகரத்து செய்ததை அடுத்து  அந்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது. விவாகரத்துக்குப் பிறகு அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் ரிலீஸானது. அடுத்து குஷி, யசோதா மற்றும் சகுந்தலம் ஆகிய படங்கள் வரிசையாக ரிலீஸுக்குக் காத்திருக்கின்றன.

படங்களில் பிஸியாக நடிப்பது போல சமூகவலைதளங்களிலும் ஆக்டிவ்வாக இருந்து வருபவர் சமந்தா. தன்னுடைய புகைப்படங்கள், வொர்க் அவுட் காட்சிகள் என அடுத்தடுத்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வைரலாவார். அப்படி சமீபத்தில் தனது வளர்ப்பு நாயோடு இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார். அதில் அவரின் பாலோயர் ஒருவர் “கடைசி வரை இப்படியே நாய் மற்றும் பூனைகளோடுதான் இவர் வாழப்போகிறார்” என்று கூறியிருந்தார். அந்த கமெண்ட்டுக்கு சமந்தா “நான் என்னை மிகவும் அதிர்ஷ்டசாலியாக நினைத்துக் கொள்வேன்” என்று கூற பலரும் சமந்தாவுக்கு ஆதரவாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சல்மான் கான் படத்துல ‘மாஸ்டர்’ மாளவிகாவா? அவரே அளித்த விளக்கம்!