Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ராதாரவி காலத்தில் ஏன் இதை செய்யவில்லை? பூச்சிமுருகன் ஆவேசம்

ராதாரவி காலத்தில் ஏன் இதை செய்யவில்லை? பூச்சிமுருகன் ஆவேசம்
, வியாழன், 7 நவம்பர் 2019 (20:40 IST)
நடிகர் சங்கம் சரியாக இயங்கவில்லை என்பதால் அதற்கு ஏன் தனி அதிகாரியை நியமனம் செய்யக்கூடாது என்று நடிகர் சங்கத்திற்கு தமிழக அரசு சமீபத்தில் நோட்டீஸ் அனுப்பிய நிலையிலின்று திடீரென கீதா என்ற அதிகாரியை நடிகர் சங்கத்திற்கு தனி அதிகாரியாக நியமனம் செய்துள்ளது. இதனால் நடிகர் சங்கத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:
 
நடிகர் சங்க தலைவர் நாசர்: தனி அதிகாரிக்கு நாங்கள் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. அதுமட்டுமின்றி தனி அதிகாரிக்கு தேவையான ஒத்துழைப்பையும் கொடுக்க தயார். இருப்பினும் இந்த விவகாரம் குறித்து நாங்கள் முதலமைச்சரையும் செய்தித் துறை அமைச்சரையும் சந்திக்க திட்டமிட்டுள்ளோம். தேர்தல் முதல் அனைத்தையும் சட்டரீதியாக எதிர்கொண்ட நாங்கள் இந்த விவகாரத்தையும் சட்டரீதியாகவே எதிர்கொள்வோம்
 
பூச்சிமுருகன்: சிறப்பு அதிகாரி நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவுள்ளோம். 4 பேர் கொடுத்த புகாரின் அடிப்படையில் 3000 பேர் உறுப்பினராக கொண்ட சங்கத்திற்கு ஒரு தனி அதிகாரியை நியமித்தது சரிதானா? சரத்குமார்-ராதாரவி காலத்தில் சங்கத்தில் பல குளறுபடிகள் இருந்தபோது தனி அதிகாரியை ஏன் நியமனம் செய்யவில்லை
 
நடிகர் கார்த்தி: நடிகர் சங்கம் கடந்த சில மாதங்களாக இயங்கவில்லை என்ற குற்றச்சாட்டு முற்றிலும் தவறு.  கடந்த ஆகஸ்ட் மாதம் வரை அனைவருக்கும் பென்ஷன் சென்று கொண்டிருந்தது 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நயன்தாராவின் அடுத்த ஹீரோ ஆர்ஜே பாலாஜியா?