Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

என் படம் எப்போது ரிலிஸ் – கௌதம் மேனனைத் துரத்தும் கார்த்திக் நரேன் !

Advertiesment
என் படம் எப்போது ரிலிஸ் – கௌதம் மேனனைத் துரத்தும் கார்த்திக் நரேன் !
, செவ்வாய், 5 நவம்பர் 2019 (08:51 IST)
கௌதம் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் உள்ள பல படங்கள் முடக்கத்தில் உள்ள நிலையில் அவர் தயாரித்துள்ள நரகாசூரன் படம் எப்போது ரிலிஸ் ஆகும் என இயக்குனர் கார்த்திக் நரேன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழில் 'துருவங்கள் 16' என்ற படத்தின் மூலம்  தமிழ் சினிமாவில் இளம் இயக்குனராக தடம் பதித்த கார்த்திக் நரேன் தற்போது 'நரகாசூரன்' என்ற படத்தை இயக்கி வருகிறார். அரவிந்த் சாமி, ஸ்ரேயா சரண் ஆகியோர் நடிக்கும் இப்படத்தை இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் ஆகியோர் தயாரித்தனர். படப்பிடிப்பு முடிந்தும் கௌதம் மேனனின் பணப் பிரச்சனைகளால் ஓராண்டாக இந்தப் படம் இன்னும் ரிலிஸாகாமல் உள்ளது.

அதுமட்டுமில்லாமல் கௌதம் மேனன் இயக்கத்தில் எனை நோக்கி பாயும் தோட்டா, துருவ நட்சத்திரம் மற்றும் தயாரிப்பில் நெஞ்சம் மறப்பதில்லை ஆகியப் படங்களும் சில வருடங்களாக கிடப்பில் உள்ளன. இந்நிலையில் சமீபத்தில் எனை நோக்கி பாயும் தோட்டா நவம்பர் 29 ஆம் தேதி ரிலிஸாகும் எனவும் அவர் புதிதாக இயக்கி வரும் ஜோஸ்வா படம் பிப்ரவரி 2020 ஆம் ஆண்டு வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டது. மேலும் துருவ நட்சத்திரம் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளும் தொடங்கி இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இது சம்மந்தமாக கௌதம் மேனன் டிவிட்டரில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார்.

அதையடுத்து கௌதம் மேனனின்  அந்த டிவிட்டுக்குப் பதிலளித்த கார்த்திக் நரேன், என்னுடைய படம் எப்போது ரிலீஸ் ஆகும் எனக் கேள்வி எழுப்பியுள்ளார். ஏற்கனவே நரகாசூரன் சம்மந்தமாக கார்த்திக் நரேன் கௌதம் மேனன் மேல் குற்றச்சாட்டு வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வதந்தி உண்மையானது: ’தளபதி 64’ படத்தின் தயாரிப்பாளர் திடீர் மாற்றம்