Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜி பி முத்து மீது போலிஸில் புகாரளிக்கும் மீரா மிதுன் – உச்சத்தில் இணைய மோதல்!

Advertiesment
ஜி பி முத்து மீது போலிஸில் புகாரளிக்கும் மீரா மிதுன் – உச்சத்தில் இணைய மோதல்!
, வெள்ளி, 7 ஆகஸ்ட் 2020 (17:47 IST)
டிக்டாக் பிரபலம் ஜி பி முத்து மீது நடிகை மீரா மிதுன் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.

நடிகை மீரா மிதுன் நடித்ததே சில படங்கள் தான். ஆனால்  அவர் எப்போதும் அவரது படங்களுக்காக பேசப்பட்டதே இல்லை. ஏதேனும் சர்ச்சைகளை இழுத்துக் கொண்டு வந்து அவ்வப்போது சமுகவலைதளங்களில் நடக்கும் விவாதங்களில் மையப்புள்ளியாக இருப்பார். அந்த வகையில் அவர் இப்போது கைவைத்திருப்பது நடிகர் சூர்யாவை. சூர்யாவோடு தானா சேந்த கூட்டம் படத்தில் ஒரு துக்கடா கதாபாத்திரத்தில் நடித்தார் மீரா. ஆனால் அந்த படத்தில் தன் காட்சிகளை ஒரே டேக்கில் நடித்து முடித்ததாகவும் சூர்யா எல்லாக் காட்சிகளையும் 10 முறைக்கும் மேல் நடித்ததாகவும், அவருக்கு நடிப்புன்னா என்னன்னே தெரியாது எனவும் கூறி சர்ச்சையைக் கிளப்பினார்.

இந்நிலையில் சூர்யா ரசிகர்கள் அவரை இணையத்தில் திட்ட ஆரம்பித்தனர். அதில் ஒரு சிலர் ஆபாசமாக மீராவை திட்ட இப்போது மீரா பதிலுக்கு சூர்யா மற்றும் விஜய் ரசிகர்களுக்கு எதிராக ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் இனிமேல் என்னை ஆபாசமாக பேசினால் ‘நானும் பதிலுக்கு ஜோதிகா மற்றும் சங்கீதாவை ஆபாசமான வார்த்தைகளால் திட்டுவேன் (சில ஆபாசமான வார்த்தைகளை சொல்கிறார்). மேலும் என்னைத் திட்டுவதை விட்டு நான் சாதித்த அளவுக்கு நீங்களும் சாதியுங்கள்’ எனக் கூறியுள்ளார். இந்த வீடியோவானது ரசிகர்களை மேலும் கோபப்படுத்தியுள்ளது.

விஜய் மற்றும் சூர்யா ரசிகர்கள் மட்டுமில்லாமல் சமூகவலைதளத்தில் இருக்கும் பிரபலங்களும் மீரா மிதுன் மீது கோபத்தில் உள்ளனர். அந்த வகையில் டிக்டாக் பிரபலம் ஜி பி முத்து மீரா மிதுனுக்கு எதிராக வீடியோ வெளியிட்டு அதில் மீரா மிதுனைக் கடுமையாக கண்டித்துள்ளார். இதையடுத்து அந்த வீடியோவைப் பகிர்ந்த மீரா ‘ஜி பி முத்து நீங்கள் ஏற்கனவே ஒரு மாதத்துக்கு முன்னர் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை இகழ்ந்து பேசி காவல் நிலையத்துக்கு சென்றீர்கள். இப்போது எனது வழக்கறிஞர் திருநெல்வேலி காவல் நிலையத்துக்கு புகாரளிக்க சென்றுள்ளார்’ எனக் கூறியுள்ளார். இதனால் மீரா மிதுன் சர்ச்சை மீண்டும் உக்கிரம் பெற்றுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராமர் கோயில் சர்ச்சை – மணிரத்னதை வம்பிழுக்கும் திரௌபதி இயக்குனர்!