விஸ்வாசம் படத்தின் 50 ஆவது நாள் நாளைக் கொண்டாடப்பட இருக்கிறது. அதை முன்னிட்டு ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக படக்குழு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.
பேட்ட மற்றும் விஸ்வாசம் ஆகிய இருப் படங்களும் பொங்கலுக்கு ரிலிஸாகி நல்ல வசூல் மழைப் பொழிந்தன. பேட்ட படம் 11 நாள்களில் 100 கோடி வசூல் செய்ததாகவும் விஸ்வாசம் படம் 8 நாட்களில் 125 கோடி ரூபாய் வசூலித்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் தமிழகத்தைப் பொறுத்தவரை இவ்வளவுப் பெரிய வசூல் சாத்தியமே இல்லை என வர்த்தக வட்டாரங்களில் உள்ளவர்கள் கருத்துக் கூறினர்.
சமீபத்தில் நாளிதழ் ஒன்றிற்குப் பேட்டியளித்த அவர் ‘ விஸ்வாசம் ஒரு ப்ளாக் பஸ்டர் ஹிட். நாங்கள் தயாரித்ததிலேயே அதிக வசூல் செய்தப் படம். தமிழகத்தில் தியேட்டர்கள் மூலமாக மட்டுமே ரூ.125 கோடி முதல் ரூ.135 கோடி வசூல் செய்துள்ளது.விநியோகஸ்தர்களுக்கு மட்டுமே 70 முதல் 80 கோடி ரூபாய் வரை பங்குக் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. பெண்களுக்கு இந்தப் படம் மிகவும் பிடித்ததால் இவ்வளவுப் பெரிய வசூலை நிகழ்த்தியுள்ளது’ எனக் கூறினார். இதன் மூலம் தமிழ்நாட்டில் திரையரங்கங்களின் மூலம் அதிக வசூல் செய்தப் படம் என்ற சாதனையை விஸ்வாசம் நிகழ்த்தியுள்ளது.
இன்னும் சில திரையரங்கங்களில் விஸ்வாசம் படம் ஓடிக்கொண்டிருக்கும் போதே அமேசான் பிரைம் ஸ்ட்ரீமிங் இணையதளத்திலும் வெளியாகி சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கிறது. நாளை விஸ்வாசம் படம் ரிலிஸாகி 50 ஆவது நாளை நிறைவு செய்ய இருக்கிறது. இதனை அஜித் ரசிகர்கள் திரையரங்கங்களில் விமரிசையாக கொண்டாடத் திட்டமிட்டு வருகின்றனர். அதேப் போல ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக தயாரிப்புத் தரப்பு விஸ்வாசம் படத்தின் ஒரிஜினல் சவுண்ட் ட்ராக்கை நாளை மாலை 7 மணிக்கு இணையதளங்களில் ரிலிஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். இதனால் அஜித் ரசிகர்கள் இரட்டிப்பு சந்தோஷத்தில் உள்ளனர்.