Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாகிஸ்தானிடம் சிக்கினாரா இந்திய விமானி? இந்தியாவின் அடுத்த நடவடிக்கை என்ன?

பாகிஸ்தானிடம் சிக்கினாரா இந்திய விமானி? இந்தியாவின் அடுத்த நடவடிக்கை என்ன?
, புதன், 27 பிப்ரவரி 2019 (15:41 IST)
இந்தியா - பாகிஸ்தான் இடையே நடத்து வரும் மோதல் காரணமாக எல்லை பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இன்று காலை பாகிஸ்தான் விமானம் எப்-16 போர் விமானம் இந்திய எல்லைக்குள் நுழைந்தது. 
 
இதை பற்றி அறிந்தவுடன் உடனடியாக சுதாரித்துக்கொண்ட இந்திய விமானப்படை பதில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் பாகிஸ்தானில் ஒரு விமனாம் சுட்டு வீழ்த்தப்பட்டு இரண்டு விமானங்கள் விரட்டி அடிக்கப்பட்டன. 
 
இந்நிலையில், இன்று காலை மிக் 21 விமானத்தில் சென்ற இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் இன்னும் திரும்பவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலை இந்திய வெளியுறவு செய்தித்தொடர்பாளர் ரவிஷ் குமார் உறுதி செய்துள்ளார். 
webdunia
அதோடு, காணாமல் போன விமானியை பாகிஸ்தான் பிடித்து வைத்திருப்பதாக பாகிஸ்தான் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்த தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை, இது குறித்து விசாரித்து வருகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
எல்லையில் தொடர்ந்து பதற்றம் நீடிக்கும் நிலையில்  எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்றும், எதற்கும் இந்தியா தயார் நிலையில் இருப்பதாகவும் மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ள நிலையில் இந்தியாவின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது பலரின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

செக் மோசடி : ’ஆறடி உயர ’நடிகருக்கு வந்த சோதனை