முகவரி மற்றும் வேட்டையாடு விளையாடு படங்களின் வரிசையில் இணைந்த ஆர்யன்…க்ளைமேக்ஸ் மாற்றம்!

vinoth
வியாழன், 6 நவம்பர் 2025 (09:21 IST)
நடிகர் விஷ்ணு விஷாலின் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஆர்யன்’ திரைப்படம் அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாகி நல்ல வசூலையும் விமர்சனங்களையும் பெற்றுள்ளது. ‘இந்தப் படத்தில் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் இயக்குநர் செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாம் சி.எஸ். இசையமைத்துள்ள இந்தப் படம், ஒரு கிரைம் த்ரில்லர் பாணியில் உருவாக்கப்பட்டுள்ளது.

படம் நல்ல வசூலைப் பெற்றுவந்தாலும் இந்த படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி பெரும்பாலான ரசிகர்களுக்கு உவப்பாக இல்லை. இந்த க்ளைமேக்ஸ் நியாயமில்லாத க்ளைமேக்ஸ் என சொல்லி இணையத்தில் விமர்சனங்களும் எழுந்தன.

இதைக் கருத்தில் கொண்ட படக்குழு படத்துக்காக முதலில் எடுக்கப்பட்டிருந்த மற்றொரு க்ளைமேக்ஸ் காட்சியைப் படத்தோடு இணைத்துள்ளார்களாம். இதைப் படத்தின் ஹீரோவும் தயாரிப்பாளருமான விஷ்ணு விஷால் அறிவித்துள்ளார். கடந்த காலங்களில் ‘முகவரி’ மற்றும் ‘வேட்டையாடு விளையாடு’ போன்ற படங்களுக்கும் இதுபோல க்ளைமேக்ஸ் மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்திக்கின் மார்க்கெட்டை அவரேதான் அழித்துக் கொண்டார்… பிரபல நடிகர் & இயக்குனர் பகிர்ந்த சம்பவம்!

மெஸ்ஸி என்னை விட சிறந்தவரா?... உலகக் கோப்பை எல்லாம் பெரிதில்லை – ரொனால்டோ கருத்து!

28 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் ரஜினி- சுந்தர் சி கூட்டணி… என்ன எதிர்பார்க்கலாம்?

ப்ரதீப்பை நான் ஒரு ஸ்டாராகதான் பார்க்கிறேன்… சக நடிகர் கவின் பாராட்டு!

ரஜினி நடிக்கும் புதிய படம்!.. கமல் கொடுத்த அப்டேட்!.. வைரல் போட்டோ!...

அடுத்த கட்டுரையில்
Show comments