Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்து கௌதம் மேனன் இயக்கத்தில் ஒரு படம்… மத கஜ ராஜா சக்ஸஸ் மீட்டில் அப்டேட் கொடுத்த விஷால்!

vinoth
சனி, 18 ஜனவரி 2025 (07:31 IST)
விஷால் நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் ஜெமினி பிலிம் சர்க்யூட் தயாட்ரிப்பில் உருவாகி 12 ஆண்டுகளாக ரிலிஸாகாமல் இருந்த மத கஜ ராஜா கடந்த ஜனவரி 12 ஆம் தேதி ரிலீசானது. விஷால் மற்றும் சுந்தர் சி கூட்டணி முதல் முறையாக சேர்ந்த திரைப்படத்தில் அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார், சந்தானம், மணிவண்ணன் மற்றும் மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இந்த படம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. பொங்கல் போன்ற ஒரு பண்டிகைக்கு ஏற்ற கலகலப்பான படமாக மத கஜ ராஜா உள்ளதாக விமர்சனங்கள் பரவி வருகின்றன. இந்நிலையில் இந்த படத்தில் மறைந்த நடிகர் மனோபாலா நடித்திருக்கும் கதாபாத்திரம் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. பொங்கலுக்கு வெளியான பல படங்களில் அதிகம் வசூல் செய்யும் படமாக மத கஜ ராஜா முன்னிலையில் உள்ளது. இந்த படம் விரைவில் 50 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து அண்மையில் நடந்த இந்த படத்தின் வெற்றிச் சந்திப்பில் பேசிய நடிகர் விஷால் “மத கஜ ராஜா ரிலீஸ் ஆகவேண்டும் என நானும் சுந்தர் சி சாரும் நிறை முறை பேசிக்கொண்டிருந்தோம். அது இப்போது நடந்துள்ளது. என் உடல் நிலைப் பற்றி பலரும் விசாரித்தார்கள். இந்த அன்புக்கு நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும். அடுத்து கௌதம் மேனன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. அதன் பின்னர் துப்பறிவாளன் 2 படத்தை இயக்கவுள்ளேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சம்பளமே வாங்காமல் சிம்பு படத்தை இயக்குகிறாரா வெற்றிமாறன்? என்ன காரணம்?

’டூரிஸ்ட் பேமிலி’ இயக்குனரை வளைக்க முயற்சிக்கும் சிம்பு, தனுஷ், எஸ்கே.. பட்டியலில் இணைந்த தெலுங்கு நடிகர்..!

அஜித்தின் அடுத்த பட சம்பளம் இத்தனை கோடியா? விஜய்யை நெருங்கிவிட்டாரா?

சிம்பு - சந்தானம் மோதலால் படமே டிராப்பா? பார்க்கிங் இயக்குனரின் பரிதாப நிலை..!

பூனம் பாஜ்வாவின் அழகிய கேண்டிட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments