நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு சர்வைவல் ஆகிக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் அவர் நடித்த டிடி ரிட்டர்ன்ஸ் மற்றும் வடக்குப்பட்டி ராமசாமி ஆகிய படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. இதையடுத்து சந்தானம் அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகிறார்.
அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனால் சந்தானம் ஹீரோவாக நடித்து சம்பாதித்ததை விட இழந்ததுதான் அதிகம் என சொல்லப்படுகிறது. ஏனென்றால் அவர் ஹீரோவாக நடித்த படங்கள் நடித்த பெருவாரியானப் படங்களை அவரே தயாரித்திருந்தார்.
இந்நிலையில் அவர் காமெடியனாக நடித்திருந்த ‘மத கஜ ராஜா’ 12 ஆண்டுகள் கழித்து ரிலீஸாகி சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. படம் பார்த்த பலரும் சந்தானம் மீண்டும் காமெடியனாக நடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து வருகின்றனர். அதில் இயக்குனர் சுந்தர் சி யும் ஒருவர்.
இந்நிலையில் சந்தானத்தின் சக நடிகரான லொள்ளு சபா மாறன் இது பற்றி பேசுகையில் “சந்தானத்தை மறுபடியும் காமெடியனா நடிக்க சொல்லி கேக்குறாங்க. ஆனா இதுவரை அவர் ஹீரோவா பண்ண் 16 படங்கள்ல 10 படங்கள் பெரிய ஹிட் ஆயிருக்கு. காமெடியனா இருந்தா என்ன? ஹீரோவா இருந்தா என்ன? ஹீரோவா இருந்த ரெண்டு சண்டைக் காட்சி, நாலு பாட்டு கிடைக்கும். அவ்வளவுதான்” எனக் கூறியுள்ளார்.