Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விடாமுயற்சி படத்தில் அஜித் சூப்பர் ஹீரோ இல்லை… மகிழ் திருமேனி எச்சரிக்கை!

vinoth
சனி, 18 ஜனவரி 2025 (07:23 IST)
மகிழ் திருமேனி இயக்கத்தில், லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் அஜித்குமார் மையக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் விடாமுயற்சி. அர்ஜுன், ரெஜினா கஸாண்ட்ரா, த்ரிஷா என பலர் நடித்துள்ள இந்த படம் கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து படப்பிடிப்பில் இருந்து வந்த நிலையில் ரசிகர்கள் தொடர்ந்து படத்திற்காக காத்திருந்தனர். பல தாமதங்களுக்குப் பிறகு படம் பிப்ரவரி 6ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் விடாமுயற்சி படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ஏகோபித்த வரவேற்பைப் பெற்று வருகிறது. படம் முழுவதும் அஜித்குமார் அஜர்பைஜானில் கார் ஓட்டும் காட்சிகளும், ஆக்‌ஷன் காட்சிகளும் இது பக்கா ஆக்‌ஷனான படம் என்பதை உணர்த்தும் விதமாக உள்ளன. இதனால் இந்த டிரைலர் அதிகளவில் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

இந்நிலையில் படம் பற்றி பேசியுள்ள இயக்குனர் மகிழ் திருமேனி “விடாமுயற்சி படம் மாஸ் எண்டர்டெயினர் படம் இல்லை. அதனால் படத்தில் அஜித்தை சூப்பர் ஹீரோவா எதிர்பார்க்காதீங்க. நம்மில் ஒருவன் ஹீரோவானால் எப்படி இருக்குமோ அப்படி வாழ்க்கைக்கு நெருக்கமான ஒரு ஆக்‌ஷன் படமாக விடாமுயற்சி இருக்கும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வெண்ணிற உடையில் ரித்திகா சிங்கின் க்யூட் க்ளிக்ஸ்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் கிளாமரஸ் போட்டோஷூட் ஆல்பம்!

“கேம்சேஞ்சர் கதை ஏன் ஹிட்டாகவில்லை என்று…” – கார்த்திக் சுப்பராஜ் பதில்!

சிம்புவுக்கு நான் எப்போதும் ‘நோ’ சொல்ல மாட்டேன்: STR 49 படத்தில் நடிப்பதை உறுதி செய்த சந்தானம்..!

வேட்டையன் படத்திற்கு பின் மீண்டும் ரஜினிகாந்த் - பகத் பாசில் கூட்டணி.. பரபரப்பு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments