விஷால் நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் ஜெமினி பிலிம் சர்க்யூட் தயாட்ரிப்பில் உருவாகி 12 ஆண்டுகளாக ரிலிஸாகாமல் இருந்த மத கஜ ராஜா நேற்று ரிலீசானது. விஷால் மற்றும் சுந்தர் சி கூட்டணி முதல் முறையாக சேர்ந்த திரைப்படத்தில் அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார், சந்தானம், மணிவண்ணன் மற்றும் மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இந்த படத்தினைப் பிரபலங்களுக்கான ஸ்பெஷல் திரையிட்டனர். அதில் படம் பார்த்த பலர் படம் கண்டிப்பாக வெற்றி பெறும் எனவும் இந்த பொங்கல் வின்னர் மதகஜராஜாவாகதான் இருக்கும் எனவும் கருத்து தெரிவித்தனர். அதே போல நேற்று படம் மக்கள் பார்வைக்கு வந்த போதும் ரசித்துக் கொண்டாடினர்.
இதையடுத்து படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி படம் முதல் நாளில் 3 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதன் மூலம் இந்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸான படங்களில் முதல் நாளில் அதிக வசூல் செய்த படமாக மத கஜ ராஜா அமைந்துள்ளது. இனி விடுமுறை நாட்களில் இந்த வசூல் அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.