எதிர்நீச்சல், காக்கிச் சட்டை, கொடி மற்றும் பட்டாஸ் ஆகிய படங்களின் மூலமாக இயக்குனராக அறியப்பட்ட துரை செந்தில்குமார் , சூரியை வைத்து இயக்கிய கருடன் திரைப்படத்தின் மூலம் ரி எண்ட்ரி கொடுத்தார். இதையடுத்து அவர் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார்.
 
									
			
			 
 			
 
 			
			                     
							
							
			        							
								
																	இந்நிலையில் அவர் அடுத்து இயக்கவுள்ள படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே அவர் விஷாலுக்கு  துரை செந்தில்குமாருக்கும் தனித்தனியாக அட்வான்ஸ் கொடுத்து வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
									
										
			        							
								
																	விஷால் நடிப்பில் சமீபகாலமாக மார்க் ஆண்டனி தவிர வேறு எந்த படமும் ஓடவில்லை என்பதால் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக அவர் புதுப்படங்கள் எதிலும் கமிட்டாகாமல் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.