Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வித்தியாசமான தலைப்பில் விஷால் படம்! படக்குழுவினர் அறிவிப்பு!

Webdunia
திங்கள், 3 ஜனவரி 2022 (10:26 IST)
விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா நடிக்கும் படத்துக்கு மார்க் ஆண்டனி எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

விஷால் சர்ச்சை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தை விஷாலின் எனிமி படத்தை தயாரித்த மினி ஸ்டுடியோஸ் வினோத்குமாரே தயாரிக்க உள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க எஸ் ஜே சூர்யாவை அனுகியுள்ளனர். மாநாடு படத்தின் அமோக வெற்றியால் எஸ் ஜே சூர்யா தன்னுடைய சம்பளத்தை 6 கோடியாக உயர்த்தி அவர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளாராம். அதனால் அவ்வளவு சம்பளம் கொடுத்து அவரை நடிக்க வைக்க வேண்டுமா என படக்குழு குழப்பத்தில் இருந்தது.

இந்நிலையில் இன்று அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் விஷால் படத்தில் எஸ் ஜே சூர்யா நடிப்பதை உறுதி செய்துள்ளனர். அதையடுத்து இப்போது இந்த படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. பாட்ஷா படத்தில் வில்லனாக நடித்து  ரகுவரனால் புகழடைந்த பெயரான மார்க் ஆண்டனி என்பதை தலைப்பாக வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

டிராப் ஆன படம் படம் மீண்டும் உயிர்ப்பெறுகிறதா? சிவகார்த்திகேயன் - சிபி சக்கரவர்த்தி படத்தின் அப்டேட்..!

விஜய் சேதுபதிக்கு சொன்ன கதையை ரஜினிக்கும் சொன்னாரா நிதிலன் சாமிநாதன்? உண்மை என்ன?

’கூலி’ டீசர், டிரைலர் கிடையாதா? வழக்கம் போல் வதந்தி பரப்பும் யூடியூபர்கள்..!

ஹாலிவுட் திரைப்படத்தில் வித்யூத் ஜம்வால்.. 'ஸ்ட்ரீட் ஃபைட்டர்' படத்தில் முக்கிய கேரக்டர்..

மிர்னாளினி ரவியின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments