நடிகர் எஸ் ஜே சூர்யா விஷால் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
விஷால் சர்ச்சை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தை விஷாலின் எனிமி படத்தை தயாரித்த மினி ஸ்டுடியோஸ் வினோத்குமாரே தயாரிக்க உள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க எஸ் ஜே சூர்யாவை அனுகியுள்ளனர். மாநாடு படத்தின் அமோக வெற்றியால் எஸ் ஜே சூர்யா தன்னுடைய சம்பளத்தை 6 கோடியாக உயர்த்தி அவர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளாராம். அதனால் அவ்வளவு சம்பளம் கொடுத்து அவரை நடிக்க வைக்க வேண்டுமா என படக்குழு குழப்பத்தில் இருந்தது.
இந்நிலையில் இன்று அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் விஷால் படத்தில் எஸ் ஜே சூர்யா நடிப்பதை உறுதி செய்துள்ளனர்.