விஷால் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஒரு திரைப்படம் உருவாக உள்ளது என்பதும் இந்த படத்தை எனிமி படத்தை தயாரித்த நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளியானது
இந்த நிலையில் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் நாளை ஜனவரி 1ஆம் தேதி புத்தாண்டு தினத்தில் இந்த படத்தின் சூப்பர் அப்டேட் ஒன்றை வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்
விஷாலின் 33வது படமாக உருவாக இருக்கும் இந்த படத்தின் டைட்டில் அல்லது பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது இதனால் விஷால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த படம் ஒரு அதிரடி ஆக்ஷன் படம் என்றும் விஷால் இதுவரை நடித்திராத வித்தியாசமான கேரக்டரில் இந்த படத்தில் நடிக்க உள்ளார் என்றும் கூறப்பட்டு வருகிறது