விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விடுமுறையை முன்னிட்டு ரிலீஸ் ஆனத் திரைப்படம் மார்க் ஆண்டனி. இந்த படத்தை மினி ஸ்டியோஸ் சார்பாக வினோத் தயாரிக்க, ஜி வி பிரகாஷ் இசையமைத்திருந்தார். இந்த படம் செப்டம்பர் 15 ஆம் தேதி சோலாவாக ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.
படத்தில் விஷாலுக்கு இணையான ஸ்கிரீன் ஸ்பேஸை எஸ் ஜே சூர்யாவுக்குக் கொடுத்திருந்ததும் வெற்றிக்கு மிக முக்கியக் காரணமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் படத்தின் சக்ஸஸ் மீட் சமீபத்தில் நடந்தது. இந்நிலையில் இப்போது படம் ரிலீஸாகி 19 நாட்களைக் கடந்துள்ள நிலையில் உலகம் முழுவதும் 100 கோடி ரூபாய் வசூலித்த படமாக மார்க் ஆண்டனி உருவாகியுள்ளது.
இது விஷாலின் முதல் 100 கோடி ரூபாய் வசூல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.