இன்று தொடங்குகிறது விஷால்- சுந்தர் சி இணையும் படம்?

vinoth
செவ்வாய், 14 அக்டோபர் 2025 (09:57 IST)
சமீபகாலமாக நடிகர் விஷாலின் திரைவாழ்க்கையை அதிகளவில் பின்னடைவை சந்தித்து வருகிறது. அவர் நடிப்பில் சமீபத்தில் ‘மார்க் ஆண்டனி’ மற்றும் மத கஜ ராஜா ஆகிய படங்கள் மட்டுமே வெற்றி பெற்றன. அதே போல அவர் உடல்நிலைக் குறித்தும் பொதுவெளியில் பல சர்ச்சைகள் எழுந்தன. இந்நிலையில் விஷாலின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அவர் நடிகை சாய் தன்ஷிகாவைத் திருமணம் செய்யவுள்ளர்.

அதையடுத்து தற்போது ரவி அரசு இயக்கத்தில் ‘மகுடம்’ என்ற படத்திலும் மூன்று விதமான கெட்டப்களில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பில் அவர் எந்த தாமதமும் இன்றி சுறுசுறுப்பாகக் கலந்துகொள்வதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் 60 சதவீத ஷூட்டிங் நிறைவடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தை முடித்ததும் அவர் சுந்தர் சி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் இன்று இந்த படத்தின் பூஜை நடக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் கயாடு லோஹர் கதாநாயகியாக நடிக்க விஜய் ஆண்டனி இசையமைக்கவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீல நிற சேலையில் ஆளையிழுக்கும் அழகில் அசத்தும் மிருனாள் தாக்கூர்!

வெண்ணிற சேலையில் ஏஞ்சல் லுக்கில் போஸ் கொடுத்த வாணி போஜன்!

உலகளவில் முதல் நாளில் 22 கோடி ரூபாய்… டாப் கியரில் செல்லும் ‘ட்யூட்’!

‘குட் பேட் அக்லி’ எங்களுக்குப் பெரிய லாபமில்லை… தயாரிப்பாளர் ஓபன் டாக்!

ஜூனியர் NTR & பிரசாந்த் நீல் படத்தின் ரிலீஸ் தள்ளிவைப்பு?

அடுத்த கட்டுரையில்
Show comments