இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில், நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் 'மூக்குத்தி அம்மன் 2 முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியால் அதிக எதிர்பார்ப்புகளைக் கிளப்பியுள்ளது. ஆனால் இந்த படம் அடுத்த ஆண்டு இறுதியில் தான் வெளியாகும் என தெரிகிறது.
'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது கிட்டத்தட்ட நிறைவடைந்துவிட்டன. படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு மட்டுமே எஞ்சியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் இந்த படம் ஒரு பக்தி மற்றும் கற்பனை கலந்த கதையாக இருப்பதால், அதிக அளவில் கம்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் உள்ளன. காட்சிகளுக்கு தேவையான தரமான விஷுவல் எஃபெக்ட்ஸ் கொடுக்க, கிட்டத்தட்ட ஆறு முதல் ஏழு மாதங்கள் வரை கால அவகாசம் தேவைப்படலாம் என்று படக்குழு கணக்கிட்டுள்ளது.
சிஜி வேலைகளுக்காக தேவைப்படும் நேரத்தை கணக்கில் கொண்டு, 'மூக்குத்தி அம்மன் 2' படத்தின் வெளியீட்டு தேதி அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15 அல்லது ஆயுதபூஜை விடுமுறை தினமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
எனவே இந்த படம் வெளியாக இன்னும் கிட்டத்தட ஒரு ஆண்டு ரசிகர்கள் காத்திருக்க வேண்டும்.