Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

’தூங்காவனம்’ இயக்குனரின் அடுத்த படத்தில் சரத்குமார்: டைட்டில் அறிவிப்பு

’தூங்காவனம்’ இயக்குனரின் அடுத்த படத்தில் சரத்குமார்: டைட்டில் அறிவிப்பு
, வியாழன், 30 டிசம்பர் 2021 (15:55 IST)
கமல்ஹாசன் நடித்த தூங்காவனம் என்ற படத்தை இயக்கிய இயக்குனர் ராஜேஷ் எம் செல்வா இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் சரத்குமார் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
தூங்காவனம், கடாரம் கொண்டான் ஆகிய திரைப்படங்களை இயக்கிய ராஜேஷ் எம் செல்வா அடுத்ததாக ஆஹா ஓடிடி தளத்திற்காக ஒரு படத்தை இயக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படத்திற்கு ’இறை’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
இந்த படத்தில் முக்கிய வேடத்தில் சரத்குமார் நடிக்கவிருப்பதாகவும் இந்த படத்தை ராதிகாவின் ராடான் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிக்கும் மேலும் சில நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் ஆஹா ஓடிடியில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் இந்த படம் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அரசியல்வாதிக்கும் பத்திரிக்கையாளருக்கும் நடக்கும் மோதலே மாறன்… தனுஷ் பட சீக்ரெட்!