Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விருமன் படத்துக்கும் இந்த பிரச்சனையா? என்ன செய்யப் போகிறார் சூர்யா!

விருமன் படத்துக்கும் இந்த பிரச்சனையா? என்ன செய்யப் போகிறார் சூர்யா!
, சனி, 11 செப்டம்பர் 2021 (17:01 IST)
இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் விருமன் படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார்.

சூர்யா தயாரிப்பில், கார்த்தி நடிப்பில், இயக்குனர் முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஒன்றில் நாயகியாக பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் அறிமுகமாகிறார். இந்த படத்திற்கு ’விருமன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் ஷங்கரின் மகள் சினிமாவில் அறிமுகமாகும் செய்தி திரையுலக ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்துக்கு விருமன் என தலைப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கையிலும் இதே பெயரில் ஒரு படம் தொடங்கப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறதாம். இதனால் அந்த படக்குழுவினர் சூர்யா தரப்பை இது சம்மந்தமாக பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாநாடு செகண்ட் சிங்கிள் எப்போது? அடுத்தடுத்து வெளியாகும் அப்டேட்!