Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மாநாடு செகண்ட் சிங்கிள் எப்போது? அடுத்தடுத்து வெளியாகும் அப்டேட்!

மாநாடு செகண்ட் சிங்கிள் எப்போது? அடுத்தடுத்து வெளியாகும் அப்டேட்!
, சனி, 11 செப்டம்பர் 2021 (16:55 IST)
நடிகர் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தின் செகண்ட் சிங்கிள் பாடல் இம்மாத இறுதியில் வெளியாக உள்ளது.

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் மாநாடு. அவருக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மற்ற கதாபாத்திரங்களில் எஸ் ஏ சந்திரசேகர், மனோஜ் பாரதிராஜா உள்ளிட்டவர்கள் நடித்து வருகின்றனர். 

நீண்ட காலமாக படப்பிடிப்பில் இருந்த இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்துள்ளது. இந்நிலையில், இப்படத்தை தீபாவளி தினத்தில் வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்கள். இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள். 

இந்நிலையில் ரசிகர்களை மேலும் குஷியாக்கும் விதமாக இன்னொரு தகவலும் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் இந்த மாதம் இறுதியில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

போஸ்டரில் ஆட்டை வெட்டி ரத்தத்தை ஊற்றிய ரஜினி ரசிகர்கள்!