க பெ ரணசிங்கம் படத்தின் இயக்குனர் விருமாண்டி மீண்டும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ஒரு படத்தை இயக்க உள்ளார்.
சமீபத்தில் ஓடிடியில் வெளியான க பெ ரணசிங்கம் திரைப்படம் மக்களின் ஆதரவைப் பெற்றுள்ளது. இந்த படத்தில் வெளிநாட்டில் விபத்து ஒன்றில் இறந்து போன தனது கணவனின் உடலை போராடி இந்தியா கொண்டுவரும் மனைவியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தார். இதில் ஆங்காங்கே அரசியல் கருத்துகளை தெளித்திருந்தார் இயக்குனர் விருமாண்டி.
இந்நிலையில் இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு கவனம் விழுந்து பரவலாக பார்க்கப்பட்டு வெற்றி பெற்றுள்ளது. இந்த படத்தின் வெற்றியால் இயக்குனர் மற்றும் வசனகர்த்தாவுக்கு பரிசளிக்கும் விதமாக காரை வழங்கினார். இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் விருமாண்டி மீண்டும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் படத்தையே இயக்க உள்ளாராம்.