Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கிட்னி மாற்ற உதவிய சூப்பர் ஸ்டாருக்கு வில்லன் நடிகர் நன்றி !

Advertiesment
கிட்னி மாற்ற உதவிய சூப்பர் ஸ்டாருக்கு வில்லன் நடிகர் நன்றி !
, வெள்ளி, 21 மே 2021 (17:12 IST)
தனது கிட்னி மாற்ற உதவி செய்த பவர் ஸ்டாருக்கு நன்றி தெரிவித்துள்ளார் நடிகர் பொன்னம்பலம்.

தமிழ் சினிமாவில் கொடூரமான வில்லனாக வலம் வந்தவர் நடிகர் பொன்னம்பலம். இவர் சூப்பர் ஸாடார்களான ரஜினி, கமல்ஹசன், விஜய், அஜித், சரத்குமார் போன்ற நடிகர்களுக்கு வில்லனாக நடித்தவர் பொன்னம்பலம்.

இவரது அபார வில்லத்தன நடிப்பால் மக்கள் உண்மையிலேயே இவர் அவ்விதம் கொடூரமாக நடந்துகொள்ளுகிறாரோ என நினைக்கும் அளவுக்கு அவரது நடிப்பு பேசப்பட்டது.

சமீபத்தில், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரது கிட்னியை மாற்ற வேண்டுமென மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இந்நிலையில்,  மருத்துவச் செலவிற்கு, நடிகர் பொன்னம்பலம் நட்சத்திரங்களிடம் உதவிவேண்டுமெனக் கேட்டு வீடியோ  வெளியிட்டார்..

இதைப்பார்த்த நடிகர் கமல்ஹாசன், சரத்குமார் போன்றோர் அவருக்கு உதவி செய்தனர். பின்னர், தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடிகர் பொன்னம்பலத்தின் கிட்னியை மாற்ற பணவுதவி செய்துள்ளார்.

தற்போது இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள  பொன்னம்பலம் சூப்பர் ஸ்டாருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இதற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜகமே தந்திரம் புதிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!