Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Friday, 10 January 2025
webdunia

மிரட்டும் வலிமை காட்சிகள்… பாராட்டிய கிராபிக்ஸ் டிசைனர்கள்!

Advertiesment
மிரட்டும் வலிமை காட்சிகள்… பாராட்டிய கிராபிக்ஸ் டிசைனர்கள்!
, வெள்ளி, 21 மே 2021 (16:44 IST)
வலிமை படத்தின் ஆக்‌ஷன் மற்றும் சேஸிங் காட்சிகள் மிரட்டலான தரத்தில் உருவாகி உள்ளதாக அந்த படத்தில் பணிபுரியும் கிராபிக்ஸ் தொழில்நுட்பக் கலைஞர்கள் தெரிவித்துள்ளனராம்.

நேர்கொண்ட பார்வை வெற்றிக்குப் பின்னர் அஜித் இப்போது வலிமை படத்தில் போலிஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். இந்த படத்துக்கு அஜித்தின் ஆஸ்தான இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கோரோனா லாக்டவுனால் தடைபட்டு மீண்டும் தொடங்கி 90 சதவீதம் வரை முடிந்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக மீதமுள்ள படப்பிடிப்பை நடத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்போது படத்தின் கிராபிக்ஸ் சம்மந்தப்பட்ட காட்சிகளின் வேலைகள் நடந்து வருகின்றன. அந்த காட்சிகளில் பணிபுரியும் கலைஞர்கள் ஸ்டண்ட் காட்சிகள் சிறப்பான தரத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாக பாராட்டுகளை தெரிவித்துள்ளனராம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நீண்ட நாட்களுக்கு பிறகு செல்வராகவனை சந்தித்த நிதீஷ் வீரா… நெகிழ்ச்சியான தருணம்!