விக்ரம் நடிப்பில் இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள வீர தீர சூரன் திரைப்படம் நாளை ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் மற்ற முக்கிய வேடங்களில் எஸ் ஜே சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் துஷாரா ஆகியோர் நடித்துள்ளனர். வீர தீர சூரன் படத்தின் இரண்டாம் பாகம் முதலில் வெளியாகும் எனவும் பின்னர் முதல் பாகம் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தைக் கேரளாவைச் சேர்ந்த தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான ஷிபு தமீம்ஸ் தயாரித்துள்ளார். இவர் ஏற்கனவே விக்ரம்மை வைத்து இருமுகன் மற்றும் சாமி2 ஆகிய படங்களைத் தயாரித்து அதில் பெரிய நஷ்டத்தை சந்தித்தவர். இந்நிலையில் தற்போது வீர தீர சூரன் படம் முடிந்து ரிலீஸுக்குக் காத்திருந்தாலும் படக்குழுவினர் பலர் மகிழ்ச்சியாக இல்லை என்று சொல்லப்படுகிறது.
படத்தில் பணியாற்றிய விக்ரம், இயக்குனர் அருண் குமார் மற்றும் உதவி இயக்குனர்கள் குழு ஆகியவர்களுக்கு இன்னும் சம்பள பாக்கி வைத்துள்ளதாம் தயாரிப்பு நிறுவனம். சமீபகாலமாக தொடர் தோல்வி படங்களைக் கொடுத்ததால் தயாரிப்பாளர் ஷிபு தமீம்ஸ் பொருளாதார நெருக்கடியில் உள்ளாராம்.