Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வீர தீர சூரன் ரிலீஸில் சிக்கலா?… அறிவித்தபடி நாளை ரிலீஸாகுமா?

Advertiesment
வீர தீர சூரன் ரிலீஸில் சிக்கலா?… அறிவித்தபடி நாளை ரிலீஸாகுமா?

vinoth

, புதன், 26 மார்ச் 2025 (09:47 IST)
விக்ரம் நடிப்பில் கடந்த ஆண்டு தங்கலான் திரைப்படம் நல்ல கவனத்தைப் பெற்றது. அதையடுத்து இப்போது சித்தா படத்தின் இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் உருவாகும் ‘வீர தீர சூரன்’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் மற்ற முக்கிய வேடங்களில் எஸ் ஜே சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் துஷாரா ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து முடிந்ததை அடுத்து தற்போது பின் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. வீர தீர சூரன் படத்தின் இரண்டாம் பாகம் முதலில் வெளியாகும் எனவும் பின்னர் முதல் பாகம் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே படத்தின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து  வருகின்றன. படம் மார்ச் 27 ஆம் தேதி நாளை ரிலீஸாகிறது.

இதற்கிடையில் இந்த படத்துக்கு B4U என்ற வட இந்திய நிறுவனம் ஒன்று முதலீடு செய்த நிலையில் அந்த நிறுவனத்துக்கு அதற்கு பதிலாக படத்தின் டிஜிட்டல் உரிமையை தயாரிப்பாளர் கொடுத்திருந்தாராம். ஆனால் இதுவரை டிஜிட்டல் உரிமை விற்கப்படாத நிலையில் தற்போது அந்த நிறுவனம் தயாரிப்பாளரோடு முரண்பட்டுள்ளதாகவும், அதனால் ரிலீஸை தடுக்க முயன்று வருவதாகவும் ஒரு தகவல் பரவி வருகின்றது. ஆனால் நாளை ரிலீஸுக்குள் பிரச்சனை தீர்க்கப்பட்டு விடும் எனவும் சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய்யுடன் மோதுவதை விரும்புகிறாரா சிவகார்த்திகேயனும்?