Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரபல இயக்குநருடன் மீண்டும் இணையும் விக்ரம்

பிரபல இயக்குநருடன் மீண்டும் இணையும் விக்ரம்
, வியாழன், 12 மே 2022 (18:54 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர் அஜய் ஞானமுத்து. இவர் டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

தற்போது விக்ரம் நடிப்பில் கோப்ரா என்ற படத்தை அவர் இயக்கியுள்ளார்.  இப்படத்தில், விக்கிரமுடன் ஸ்ரீ நிதி ஷெட்டி, மியா ஜார்ஜ், கே.எஸ்.ரவிக்குமார், கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மா இசையமைத்திருக்கிறார். ஏற்கனவே இப்படத்தின் தும்பி என்ற பாடல் ஹிட் ஆனது.

இந்த  நிலையில், தற்போது, மணி ரத்னத்திடன் பொன்னியின் செல்வன், பா.ரஞ்சித்துடன் மைதானம் உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் விக்ரம் தனது 62 வது படத்தில் அஜய் ஞானமுத்துவுடன் இணையவுள்ளார்.  இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பத்தல பத்தல பாடல் விவகாரம்: கமல்ஹாசன் மீது சென்னை காவல் ஆணையரகத்தில் புகார்