Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கமலுக்காக விட்டுக்கொடுத்த லெஜண்ட் அண்ணாச்சி… பின்னணி என்ன?

கமலுக்காக விட்டுக்கொடுத்த லெஜண்ட் அண்ணாச்சி… பின்னணி என்ன?
, வியாழன், 12 மே 2022 (09:24 IST)
நடிகர் கமலின் விக்ரம் திரைப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீடு வரும் மே மாதம் 15 ஆம் தேதி சென்னையில் நடக்கிறது.

கமல்ஹாசன் விஜய் சேதுபதி பகத் பாசில் உள்பட பலர் நடித்த விக்ரம் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த படம் வரும் ஜுன் மாதம் 3 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்துக்கும் அனிருத் இசையமைத்துள்ளார். கமல் நடிப்பில் நான்காண்டுகளுக்குப் பிறகு ரிலீஸ் ஆகும் முதல் படமாக விக்ரம் உருவாகி வருகிறது. விக்ரம் திரைப்படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் ரிலீஸ் செய்ய உள்ளது.  மலையாள உரிமையை சிபு தமீம்ஸ் கைப்பற்றியுள்ளார்.

படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் ஆகியவை ஒரே நாளில் மே 15 ஆம் தேதி ரிலீஸாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது நிகழ்வு சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த தேதியில் நேரு உள் விளையாட்டு அரங்கத்தை சரவணா ஸ்டோர்ஸ் லெஜண்ட் சரவணன் நடிக்கும் ‘லெஜண்ட்’ படத்தின் ஆடியோ ரிலீஸூக்காக முன்பதிவு செய்து வைத்திருந்ததாகவும், ஆனால் கமலுக்காக அதை விட்டுக்கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கமலின் வடசென்னை Slang… அரசியல் கருத்து… ‘பத்தல பத்தல’ பாடலில் கவனம் ஈர்த்த அம்சங்கள்!