Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ராஜமௌலிக்கு ‘No’ சொன்ன விக்ரம்… மலையாள நடிகரை டிக் அடித்த படக்குழு!

Advertiesment
ராஜமௌலி

vinoth

, செவ்வாய், 3 ஜூன் 2025 (10:21 IST)
ஆர் ஆர் ஆர் படத்துக்கு பிறகு ராஜமௌலி இயக்கும் அடுத்த படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ் பாபு நடிக்க உள்ளார். இந்த படம் புதையலைத் தேடி செல்லும் ஒரு சாகச திரைக்கதையாக அமைக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. படத்தில் கதாநாயகியாக பிரியங்கா சோப்ரா நடிக்க, கீரவாணி இசையமைக்கிறார். வால்ட் டிஸ்னி நிறுவனம் தயாரிக்கிறது.

படத்தின் பெரும்பாலான காட்சிகள் காடுகளை மையப்படுத்தி உள்ளதால் ஏராளமான காட்டு விலங்குகள் பயன்படுத்தப் பட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்தியாவில் விலங்குகளை ஷூட்டிங்கில் பயன்படுத்த ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் உள்ளதால் ஆப்பிரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் சென்று பெரும்பாலானக் காட்சிகளை படமாக்க உள்ளாராம் ராஜமௌலி.

இந்நிலையில் இந்த படத்தில் ஒரு வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க விக்ரம்மிடம் பேச்சுவார்த்தை நடத்தினாராம் ராஜமௌலி. ஆனால் விக்ரம் வில்லன் வேடத்தில் நடிக்க விருப்பமில்லை என சொல்லிவிட்டதால் இப்போது மலையாள நடிகர் பிருத்விராஜ் அந்த வேடத்தில் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கமல் மன்னிப்பு கேட்டாலும் ‘தக்லைஃப் படத்தை வெளியிட விடமாட்டோம்: கர்நாடக திரைப்பட சம்மேளனம்