Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கமல்ஹாசனின் கனவுப்படத்தில் விக்ரம்?

Advertiesment
கமல்ஹாசனின் கனவுப்படத்தில் விக்ரம்?
, திங்கள், 28 அக்டோபர் 2019 (08:36 IST)
கமல்ஹாசனின் கனவுப் படங்களில் ஒன்று மருதநாயகம் படத்தின் ஆரம்ப விழா இரண்டாம் எலிசபெத் ராணி மற்றும் அன்றைய முதல்வர் கருணாநிதி ஆகியோர்களால் கடந்த 1997ஆம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டது 
 
20 ஆண்டுகளுக்கு மேலாகியும் இந்த படம் பட்ஜெட் உட்பட பல்வேறு காரணங்களால் வளராமல் உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ’மருதநாயகம்’ மீண்டும் தொடங்கப்பட உள்ளதாக கூறப்பட்டது. இருப்பினும் இந்த தகவல் உறுதி செய்யப்படவில்லை 
 

webdunia
இந்த நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த கமலஹாசன் அவர்கள் அரசியல் பணிகள் காரணமாக ’மருதநாயகம்’ படத்தில் தன்னால் நடிக்க இயலாத நிலை ஏற்படலாம் என்றும், தனக்கு பதில் வேறொரு நடிகரை அந்த படத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறினார் 
 
இந்த நிலையில் ’மருதநாயகம்’ படத்தில் கமல்ஹாசன் கேரக்டரில் விக்ரம் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கமலஹாசன் தயாரிப்பில் உருவான ’கடாரம் கொண்டான்’ என்ற படத்தில் விக்ரம் நடித்துள்ள நிலையில் தற்போது அவர் நடிக்க வேண்டிய கனவு படத்தில் விக்ரம் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நான் ஒரு நடிகன் என்பதை நம்பமுடியவில்லை" - சூப்பர் ஸ்டார் உருக்கம்