Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிக் பாஸ் - 3 கசப்பா ? கவின் - லாஸ்லியா பெயர்’ என் நாவில் வராது - இயக்குநர் சேரன் டுவீட்

Advertiesment
பிக் பாஸ் - 3  கசப்பா ? கவின் - லாஸ்லியா பெயர்’ என் நாவில் வராது   - இயக்குநர் சேரன் டுவீட்
, சனி, 19 அக்டோபர் 2019 (15:35 IST)
தமிழகத்தில், பிரபல தனியார் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய  பிக் பாஸ் சீசன் - 3 களைகட்டிய முடிவடைந்து விட்டது. பல களேபரங்கள் சர்ச்சைகளுக்கு பின் மக்களின் பொழுதுபோக்கு அம்சம் ஒன்று  குறைந்துள்ளது. 
இனி அடுத்த பிஸ் பாஸ் 4 எப்போது ? அதில் யாரெல்லாம் பங்குபெறுவார்கள் ? யார் தொகுத்து வழங்குவது ? என்பது போன்ற கேள்விகளை மக்கள் இப்போதே எழுப்பத் தொடங்கிவிட்டனர் மக்கள்.
 
இந்நிலையில் இன்று பிரபல இயக்குநர்  சேரன் தனது டுவிட்டர் பக்கத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற இரண்டு பிரபலங்களை பற்றி ஒரு பதிவிட்டிருக்கிறார்.
 
அதில், க’வின் லாஸ்லியா விசயத்தில் அவர்கள் முடிவுக்கோ வாழ்வுக்கோ நான் குறுக்கே நிற்க போவதில்லை.அவசியமுமில்லை.
 
இனியொரு முறை என் நாவில் இருவர் பெயரும் வராது. இத்தோடு நீங்கள் அனைவரும் நாகரீகம் கருதி நிறுத்திக்கொண்டால் நல்லது. என் ப்ரச்னைக்கு வரவேண்டாம்.’ என தெரிவித்துள்ளார்.
 
மேலும், ’நான் வீட்டிற்குள்ளும் வெளியிலும் பேசிய கருத்துக்கள் காண்பித்த உணர்வுகள் யாரையேனும் காயப்படுத்தியிருந்தால் வருந்துகிறேன்.. இப்போதும் புரிந்துகொள்வீர்கள் என நினைத்தே சொல்கிறேன்.. இதற்கு மேலும் என்னை பிடிக்காதவர்கள் என்னை பின்தொடர(follow)வேண்டாம்.. மிக்க நன்றி. ’இவ்வாறு பதிவிட்டுள்ளர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மஞ்சிமா மோகனுக்கு திடீர் விபத்து - சற்றுமுன் வெளியிட்ட பரிதாப புகைப்படம்!