அதிமுகவுடன் கூட்டணி தொடருமா என்ற கேள்விக்கு, 2016 ஆம் ஆண்டு மார்ச் 16 ஆம் தேதி இந்த கேள்விக்கு பதில் சொல்கிறேன் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தல் மற்றும் 2024 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில், அதிமுக கூட்டணியில் தான் தேமுதிக இடம் பெற்றிருந்தது. ஆனால், இரண்டு தேர்தலிலும் கூட ஒரு தொகுதியில் கூட அந்த கட்சி வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட் தர வேண்டும் என பிரேமலதா கோரிக்கை விடுத்த நிலையில், அந்த கோரிக்கையை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நிராகரித்தார். இதனால், அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம் பெறுமா? என்ற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில், இன்று பிறந்தநாளை முன்னிட்டு செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா, அதிமுகவுடனான கூட்டணி தொடருமா? என்ற கேள்விக்கு "2026 ஆம் ஆண்டு மார்ச் 18 ஆம் தேதி, அதாவது எனது அடுத்த பிறந்தநாள் அன்று இது குறித்து தெளிவாக சொல்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். அவருடைய பதில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.