Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜயகாந்த் இறந்த பின்னும் தொடரும் தொண்டு… ரத்த தானம் செய்த கேப்டன் ரசிகர்கள்!

விஜயகாந்த் இறந்த பின்னும் தொடரும் தொண்டு… ரத்த தானம் செய்த கேப்டன் ரசிகர்கள்!
, வெள்ளி, 29 டிசம்பர் 2023 (14:48 IST)
தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும் தேமுதிக  நிறுவனருமான விஜயகாந்த்  நேற்று உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவு சினிமா துறையினர் மத்திலும் தொண்டர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது அவரடு உடல் சென்னை தீவுத்திடலில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கு திரையுலக கலைஞர்கள் மற்றும் அரசியல் வாதிகள் அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று மாலை 5 மணிக்கு கோயம்பேடு அவர்கள் கட்சி அலுவலகத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

இந்நிலையில் புதுக்கோட்டையில் உள்ள விஜயகாந்த் ரசிகர்கள் இன்று ரத்த தானம் செய்துள்ளனர். புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கர்ப்பிணி பெண்களுக்கு அவர்கள் ரத்த தானம் செய்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எனக்குக் கல்யாணம் ஆகிவிட்டதா? தீயாய் பரவிய தகவலுக்கு ஸ்ருதிஹாசன் விளக்கம்!