Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உடல் நல்லடக்கம் செய்யப்படும் தேமுதிக தலைமை அலுவலகத்தில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை: போலீஸ் அறிவிப்பு

vijayakanth
, வெள்ளி, 29 டிசம்பர் 2023 (13:45 IST)
தேமுதிக அலுவலகத்தில் பொதுமக்களுக்கு அனுமதியில்லை என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும் தேமுதிக  நிறுவனருமான விஜயகாந்த்  நேற்று உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவு சினிமா துறையினர் மத்திலும் தொண்டர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஜயகாந்த் உடலுக்கு, சினிமாத்துறையினர், ரசிகர்கள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் நேரில் சென்று விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிலையில் முன்னாள் எதிர்க்கட்சி தலைவரும்,  நடிகர் சங்கத் தலைவரும் எம்.எல்.ஏவுமான விஜயகாந்தின் உடல்  தேமுதிக தலைமை அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

எனவே தேமுதிக அலுவலகத்தில் பொதுமக்களுக்கு அனுமதியில்லை என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸார் அறிவித்துள்ளதாவது:

கேப்டன் விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்படும் கோயம்பேட்டியில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் குடும்பத்தினர், உறவினர்கள் என 200 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது என அறிவித்துள்ளனர்.

மேலும், கேப்டன் விஜயகாந்த் உடல் முழு அரசு மரியாதையும் தேமுதிக தலைமை அலுவலகத்தில்  நல்லடக்கம் செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஈரோடு - திருநெல்வேலி விரைவு ரயிலை, செங்கோட்டை வரை நீட்டிக்க வேண்டும்! - பாஜக தலைவர் அண்ணாமலை கோரிக்கை