விஜய் டிவி ஒரு நேஷனல் டிவி இல்லை: உண்மையை போட்டுடைத்த கமல்

சனி, 1 செப்டம்பர் 2018 (22:53 IST)
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான ஐஸ்வர்யா, பொன்னம்பலத்திடம் ஒரு நேஷனல்் டிவியில் என்னை பற்றி எப்படி தவறாக கூறலாம், என்னுடைய இமேஜ் என்னாகும் என்று சண்டை போட்டார்.

இதுகுறித்து ஐஸ்வர்யாவிடம் இன்றைய நிகழ்ச்சியில் விளக்கிய கமல்ஹாசன், 'விஜய் டிவி ஒரு நேஷனல் டிவி இல்லை, நீங்கள் தவறாக புரிந்து கொண்டீர்கள் என்று விளக்கம் அளித்தார்.

மேலும் இன்றைய நிகழ்ச்சியில் பிக்பாஸ் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தனக்கு ஏற்பட்டுள்ள தவறான இமேஜ் குறித்து விளக்கமளித்தனர். அதேபோல் இந்த பிக்பாஸ் வீட்டில் தங்க தகுதியில்லாதவர்கள் என்ற நபரையும் தேர்வு செய்தனர். ரித்விகா, ஜனனி மற்றும் மும்தாஜ் ஆகிய முவரும் ஐஸ்வர்யா இந்த வீட்டில் இருக்க தகுதி இல்லாதவர் என்று தேர்வு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.  
 

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் அமலாபால் நடித்த அடுத்த படத்திற்கு 'யுஏ' சான்றிதழ்