Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குப்பை கொட்டிய விவகாரம்: பாலாஜியிடம் மன்னிப்பு கேட்ட ஐஸ்வர்யா அம்மா!

Advertiesment
aiswarya
, புதன், 29 ஆகஸ்ட் 2018 (09:21 IST)
பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் முழுவதும் ஒரே அழுகாச்சியாக இருந்து வரும் நிலையில் போட்டியாளர்களின் உறவினர்கள் வருகையால் வீட்டின் பாசமழை பொழிகிறது.

நேற்று மும்தாஜின் அண்ணன் மற்றும் உறவினர்களின் வருகை பிக்பாஸ் வீட்டையே நெகிழ்ச்சி அடைய செய்த நிலையில் இன்றைய புரமோ வீடியோவில் ஐஸ்வர்யாவின் அம்மா வருகிறார்.

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் அதிக வெறுப்பை சம்பாதித்தவர் ஐஸ்வர்யாதான். அவரை மட்டும் பிக்பாஸ் காப்பாற்றாமல் இருந்தால் எப்பொழுதோ அவர் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டிருப்பார். அதிக கோபம், வஞ்சம், சுயபுத்தி இல்லாத குணம், மகத்தை தனது சொந்த பழிவாங்கும் குணத்திற்கு பயன்படுத்துதல், பெரியவர்களிடம் மரியாதை இல்லாமல் இருப்பது என ஐஸ்வர்யா மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுக்கள்

இந்த நிலையில் பாலாஜி மீது சர்வாதிகாரி டாஸ்க்கில் குப்பையை கொட்டியதற்கு ஐஸ்வர்யாவின் அம்மா, அவரிடம் மன்னிப்பு கேட்க, பெருந்தன்மையுடன் பாலாஜி அவருக்கு ஆறுதல் சொல்வது போல் இருந்தது இன்றைய முதல் புரமோ.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இவர்கள் எல்லாம் அஜித்தின் காலை கழுவி வணங்க வேண்டும்: பிரபல நடிகை