Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முடிந்தால் மக்களை சந்தித்து பார்! ஐஸ்வர்யாவுக்கு சவால்விட்ட ரித்விகா

Advertiesment
முடிந்தால் மக்களை சந்தித்து பார்! ஐஸ்வர்யாவுக்கு சவால்விட்ட ரித்விகா
, சனி, 1 செப்டம்பர் 2018 (20:19 IST)
பிக்பாஸ் 2 ஆரம்பித்த ஒருசில வாரங்களிலேயே ஐஸ்வர்யாவுக்கும் யாஷிகாவுக்கும் பிக்பாஸ் அதிக சலுகைகள் வழங்குகிறார் என்பது உறுதியாகியது. கமல்ஹாசனும் முதலில் ஐஸ்வர்யாவுக்கு ஜால்ரா தட்டினாலும் அதன்பின்னர் மக்களின் எதிர்ப்பை புரிந்து கொண்டு அவ்வப்போது ஐஸ்வர்யாவை வாரினார்.

இந்த நிலையில் கடந்த ஏழு வாரங்களாக ஐஸ்வர்யாவை நாமினேஷனில் இருந்து காப்பாற்றி வரும் பிக்பாஸ் இந்த வாரமும் அவரை மறைமுகமாக காப்பாற்ற, யாஷிகாவை தலைவராக்கியுள்ளார். பிக்பாஸ் எடுக்கும் இந்த முறைகேடுகள் இந்த நிகழ்ச்சியை பார்க்கும் மக்களை மட்டுமின்றி சக போட்டியாளர்களுக்கும் அதிருப்தி அளித்தது.

webdunia
இந்த நிலையில் இன்று கமல்ஹாசன் முன் ரித்விகா மற்றும் ஜனனி கொதித்தெழுந்தனர். ஐஸ்வர்யா தொடர்ந்து காப்பாற்றப்பட்டு வருகிறார். அவரை கடவுள் காப்பாற்றுகிறார் என்பது உண்மையல்ல. இரண்டு முறை யாஷிகா தான் காப்பாற்றியுள்ளார். ஐஸ்வர்யா இந்த வீட்டில் இருக்கவும், கடைசி வரை போட்டியில் தொடரவும் தகுதியில்லாதவர். அவர் முடிந்தால் மக்களை நேரடியாக சந்தித்துவிட்டு போட்டியில் தொடரட்டும் என்று ஆவேசமாக ரித்விகா பேசினார். ரித்விகாவின் இந்த ஆவேசத்தை பார்த்து கமல்ஹாசனே ஆச்சரியம் அடைந்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜோக்கர் மன்னனின் 'வஞ்சகர் உலகம்' செப்- 7ம் தேதி ரிலீஸ்