Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சில்க் ஸ்மிதா பயோபிக்கில் விஜய் சேதுபதி – வெளியான ரகசியம்!

Webdunia
திங்கள், 7 டிசம்பர் 2020 (10:09 IST)
தமிழில் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாக உள்ள நிலையில் அதில் விஜய் சேதுபதி முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

தமிழ் சினிமாவில் 80 களில் இருந்து 90 களின் தொடக்கம் வரை கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் சில்க் ஸ்மிதா. எப்படி ரஜினி கமல், கவுண்டமணி & செந்தில் மற்றும் இளையராஜா ஆகியோர் படத்தின் வியாபாரத்தை தீர்மானித்தார்களோ அதுபோல சில்க் ஸ்மிதாவின் கவர்ச்சி நடனமும் படத்தின் வியாபாரத்தை நிர்ணயித்தது. கவர்ச்சி நடிகையாக மட்டுமில்லாமல் அலைகள் ஓய்வதில்லை மற்றும் சூரக்கோட்டை சிஙகக்குட்டி ஆகிய படங்களில் மாறுபட்ட வேடங்களிலும் நடித்துள்ளார் சில்க்.

இந்நிலையில் 1995 ஆம் ஆண்டு தன்னுடைய தற்கொலை செய்துகொண்ட சில்க் ஸ்மிதாவின் மரணத்துக்குப் பின்னான காரணம் இன்னும் மர்மமாகவே உள்ளது. இந்நிலையில் அவரின் வாழ்க்கையை தமிழ் திரைப்படமாக எடுக்கும் முயற்சி தற்போது நடந்து வருகிறது. இந்த படத்தை சந்தானம் நடித்த கண்ணா லட்டு திண்ண ஆசையா படத்தை இயக்கிய மணிகண்டன் இய்க்கவுள்ளார். இயக்குனர் மற்றும் நடிகரான சித்ரா லட்சுமணன் தயாரிக்க உள்ளார். இந்த படத்துக்காக சில்க் போன்ற கண்கள் மற்றும் முக அமைப்புக் கொண்ட நாயகியை தேடும் பணி நடந்து வந்த நிலையில் புதுமுக நாயகி ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளாராம்.

மேலும் ஒரு இன்ப அதிர்ச்சியாக இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஏஆர் ரஹ்மானை பிரிந்தது ஏன்? சாய்ரா பானு விளக்கம்..!

என்ன கீர்த்திம்மா இதெல்லாம்..? பாலிவுட்டுக்கு மட்டும் இவ்ளோ தாராளமா? - Unlimited க்ளாமரை கட்டவிழ்த்த கீர்த்தி சுரேஷ்!

தனுஷுடன் சிம்பு, சிவகார்த்திகேயன்! ஆனா நயன்தாராவுக்கு மட்டும் நோ! - வைரல் புகைப்படம்!

உழைக்கும் மக்களுக்கு இன, ஜாதி வெறி வேணாம்.. சிறப்பாக சொன்னது ‘பராரி’! - படக்குழுவை பாராட்டிய திருமாவளவன்!

ரஜினி, விஜய்யை தாண்டி புதிய சாதனை படைத்த சிவகார்த்திகேயன்!

அடுத்த கட்டுரையில்