பணம், பொருள், செல்வம் ,வேலை, உணவு, தொழில் என்று நாள்தோறும் பரபரப்பாக ஓடிக் கொண்டிருந்த உலகினை ஒரே ஒரு கொரோனா என்ற உயிர்க் கொல்லி நோய் வந்து ஆட்டம் காண வைத்தது மட்டுமின்றி, நம்மை வீட்டிற்குள் உட்கார வைத்துவிட்டது.
உலகையே ஊரடங்கில் ஒரு எட்டு மாதகாமல் அடக்கிவிட்டது. தற்போதுதான் ஓரளவு கடுமையான தளர்வுகளுடன் மீண்டும் மக்கள் வெளியே வரத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், கொரொனாவுக்கு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும்முயற்சியில் உலகின் வல்லரசு நாடுகள் தீவிர முனைப்பு காணத் துடித்தனர். இதில் ஓரளவுக்கு வெற்றியும் பெற்றுள்ளனர். இருப்பினும் முயற்சிகள் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில், கொரொனாவுக்கு தடுப்பூசி தயாரித்துள்ள BioNTech நிறுவனத்தின் பங்குகள் இன்ற்டு 250% உயர்வு பெற்றுள்ளதை அடுத்து, புளூம்பெர்க்கின் 500 உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இணைந்துள்ளார் இந்நிறுவனத்தின் உகர் சைன் (இணை நிறுவனர்) இணைந்துள்ளார். அவருக்குப் பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.