நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் இப்போது 13 படங்களுக்கு மேல் உருவாகி வருகின்றன.
தென்னிந்தியாவின் மோஸ்ட் வாண்டட் நடிகர் என்றால் இப்போது அது விஜய் சேதுபதிதான். தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். அதுமட்டும் இல்லாமல் இந்தியில் இரண்டு படங்களில் நடிக்கிறார். இந்நிலையில் இப்போது கமலின் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார்.
ஏற்கனவே ரஜினி, விஜய் ஆகியவர்களோடு நடித்துள்ள நிலையில் இப்போது கமலோடு நடிக்கும் அவரிடம் அஜித்தோடு நடிப்பது எப்போது என்று கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் நான் தயாராக இருக்கிறேன். எல்லா நடிகர்களோடும் நடிக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை. எனக் கூறியுள்ளார்.