இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை குறைந்து வரும் நிலையில் மூன்றாவது அலை தவிர்க்க முடியாததாக உள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை பாதிப்புகள் குறைய தொடங்கியுள்ள நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்திய மருத்துவ சங்கம் மாநில அரசுகளுக்கு வலியுறுத்தல் அறிக்கை அனுப்பியுள்ளது.
அதில் “எந்தவொரு தொற்றுக்கும் மூன்றாவது அலை தவிர்க்க முடியாததாக இருந்திருப்பதை முந்தைய பரவல்களில் அறிய முடிகிறது. மூன்றாவது அலையை சமாளிக்க எல்லாரும் சேர்ந்து உழைக்க வேண்டியுள்ள இந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்படுவதும், மக்கள் கூட்டமாக நடமாடுவதும் வேதனையாக உள்ளது. சுற்றுலா, புனித யாத்திரை போன்றவை தேவைதான் எனினும் சில மாதங்கள் காத்திருக்கலாம்” என அறிவுறுத்தியுள்ளது.