Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீண்டும் தொடங்கிய விடுதலை 2 ஷூட்டிங்… புகைப்படத்தை பதிவிட்ட நடிகர்!

மீண்டும் தொடங்கிய விடுதலை 2 ஷூட்டிங்… புகைப்படத்தை பதிவிட்ட நடிகர்!
, வியாழன், 20 ஜூலை 2023 (08:58 IST)
மார்ச் 31 ஆம் தேதி வெளியான வெற்றிமாறன் இயக்கிய விடுதலை திரைப்படம் நேர்மறையான விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்று வருகிறது. ரசிகர்கள் மட்டும் இல்லாமல் திரையுலகைச் சேர்ந்தவர்களும் கூட பாராட்டி பதிவிட்டு வருகின்றனர். இதையடுத்து வெற்றிமாறனின் ஹிட் பட லிஸ்ட்டில் விடுதலையும் இணைந்துள்ளது. இப்போது அடுத்த பாகத்துக்கான ஷூட்டிங் சமீபத்தில் திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை என்ற இடத்தில் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் முதல் பாகத்தில் முக்கியமான வேடத்தில் நடித்திருந்த சேத்தன் இப்போது இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறார். இப்போது ஷூட்டிங் தொடங்கிவிட்ட நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

விடுதலை 2 படத்தின் காட்சிகள் ஏற்கனவே முதல் பாகத்தோடு படமாக்கப்பட்டு விட்டன. அதனால் இப்போது இரண்டாம் பாகத்தின் காட்சிகளை 25 நாட்களில் ஒட்டுமொத்த ஷூட்டிங்கையும் முடித்து திரும்ப படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் ஒரு முக்கியத் தகவலாக படத்தில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. 
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூர்யா பிறந்தநாளில் டபுள் அப்டேட்… ரசிகர்களுக்கு குஷி செய்தி!