Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சூர்யா பிறந்தநாளில் டபுள் அப்டேட்… ரசிகர்களுக்கு குஷி செய்தி!

சூர்யா பிறந்தநாளில் டபுள் அப்டேட்… ரசிகர்களுக்கு குஷி செய்தி!
, வியாழன், 20 ஜூலை 2023 (08:22 IST)
நடிகர் சூர்யா எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் தோல்விக்குப் பிறகு தற்போது சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் முடிவடைந்துள்ள நிலையில்  அடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தையும் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமே தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சூர்யாவின் பிறந்தநாள் இந்த மாதம் வரவுள்ள நிலையில் கங்குவா படத்தின் முதல் லுக் போஸ்டரும், சுதா கொங்கரா இயக்கத்தில் அவர் நடிக்கும் படத்தின் அறிவிப்பும் வெளியாகும் என சொல்லப்படுகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூர்யாவின் கங்குவா படத்தில் இவர்தான் வில்லனா… படப்பிடிப்பில் இணைந்த பிரபல ஹீரோ!